கொரோனாவை விட கொடிய வைரஸ்.. எச்சரிக்கை

by Staff / 25-05-2023 12:53:50pm
கொரோனாவை விட கொடிய வைரஸ்.. எச்சரிக்கை

உலக நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனாவை விட கொடிய தொற்றுநோயை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்க உலக நாடுகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நம்பப்படுகிறது. ஜெனிவாவில் நடைபெற்ற வருடாந்திர சுகாதார மாநாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் புதிய உருமாற்றம் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo