“இது யாருக்கான ஆட்சி?” - கொந்தளித்த செல்வப்பெருந்தகை
ரிசர்வ் வங்கியின் அடமான நகை மீதான புதிய கட்டுப்பாடுகளுக்கு, மத்திய அரசு மீது தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வங்கியில் நகைக்கடன் பெறுவது விஜய் மல்லையாவா?, அம்பானியா?. அவசர தேவைக்காக நகையை அடமானம் வைக்கும் சாதாரண மக்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதா?. கோடீஸ்வரர்களா வங்கியில் நகையை அடமானம் வைக்கின்றார்கள்?. இது யாருக்கான ஆட்சி?. 2016ஆம் ஆண்டு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வீழ்ந்த இந்திய பொருளாதாரம் இன்னும் எழவில்லை” எனறார்.
Tags :



















