தபால் நிலையத்தில் 30 லட்சம் மோசடி

by Editor / 22-05-2025 01:49:05pm
 தபால் நிலையத்தில் 30 லட்சம் மோசடி

திண்டுக்கல், அனுமந்தராயன்கோட்டை, சிந்தலக்குண்டு கிராமம் அனுப்பப்பட்டி பகுதியில் உள்ள கிளை தபால் நிலையத்தில் பணியாற்றிய வத்தலகுண்டு தும்மலபட்டியை சேர்ந்த பிரதீப் அப்பகுதி மக்கள் கிளை தபால் நிலையத்தில் பொதுமக்கள் RD, இன்சூரன்ஸ், கலைமகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் செலுத்திய பணத்தை சுமார் ரூ. 30 லட்சம் வரை மோசடி செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து தபால் நிலைய அதிகாரிகள் அனுப்பப்பட்டி கிளை தபால் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கிளை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தருமாறு கூறினர். இந்நிலையில் பிரதீப் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via
Logo