த மா கா- பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

by Admin / 14-06-2026 10:22:46pm
 த மா கா- பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

இன்று சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு த.மா.க. தலைவர் ஜி.கே. வாசன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கடந்த 12 ஆண்டுகளாக கூட்டணி அரசியலில் பயணித்ததால் கட்சியின் தனித்தன்மையையும் அடிமட்ட தொண்டர்களின் களப்பணிகளையும் தொய்வடைய வைத்துள்ளதாகவும் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி தனித்து நின்று தனது அடித்தளத்தை பலப்படுத்தவும் அதிக வெற்றி பெறவும் இனிவரும் காலங்களில் இடைப்பட்ட காலங்களிலும் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல் தனித்து செயல்படவும் தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும் தமிழ் மாநில காங்கிரஸ் முடிவெடுத்து உள்ளதாகவும் தெரிவித்த அவர் பாஜக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளுடன் தங்களுக்கு எந்த விதமான கருத்து வேறுபாடு அல்லது மனக்குமுறலோ இல்லை என்றும் நட்பு ரீதியாகவே கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் விலகுவதாக ஜிகே வாசன் தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து அனைத்து இடங்களிலும் தோல்வியை தமிழ் மாநில காங்கிரஸ் தழுவியதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo