குற்றாலத்துக்கு சுற்றுலா வந்த இடத்தில் அதிகாலையில் சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த ஆடி கார்.

தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆதில் என்பவர் தனது ஆடி காரில் சுற்றுலா வந்துள்ளார். பின்னர், கேரளா திரும்பி கொண்டிருந்துள்ளன.ர ஆயிரப்பேரி விலக்கு அருகே சென்றபோது , கார் திடீரென தீ பற்றி எரிந்தது.
உடனே, காரில் பயணித்த இருவரும் அலறியடித்து இறங்கி ஓடி உள்ளனர். தொடர்ந்து தென்காசி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் தீப்பிடித்து எறிந்த காரில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதிகாலையில் சொகுசு கார் தீப்பிடித்து எறிந்த சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : சாலையில் திடீரென தீப்பற்றி எறிந்த ஆடி கார்.