தயாரிப்பாளர் ரவீந்திரன் ஜாமீன் வழக்கு: 25ம் தேதி தீர்ப்பு
சென்னை அசோக் நகரில் லிப்ரா புரொடக்ஷன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர். இவர், தன்னிடம் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த 7ம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். இந்நிலையில் ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ரவீந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். வேல்முருகன் ஆஜராகி ஜாமீன் கோரினார். அப்போது, புகார்தாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடுகுமார் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறை தரப்பு வழக்கறிஞரும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 25 தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்
Tags :