ஏழைக்கு லாட்டரியில் அடித்த பம்பர் ஜாக்பாட்

by Staff / 06-02-2025 04:48:44pm
ஏழைக்கு லாட்டரியில் அடித்த பம்பர் ஜாக்பாட்

கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் கண்ணூரை சேர்ந்த சத்யன் என்பவருக்கு ரூ.20 கோடி விழுந்துள்ளது. சத்யன் லாட்டரியை வாடிக்கையாக வாங்காதவர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 24 அன்று அவர் 10 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து, லாட்டரி முடிவுகளை கேரள மாநில லாட்டரி துறை நேற்று வெளியிட்டது. வறுமையின் பிடியில் வாழ்ந்து வந்த சத்யனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. வரி பிடித்தம் போக ரூ.14 கோடி அவருக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via