ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

by Editor / 16-04-2021 04:28:48pm
 ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


 தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில்;
 தமிழக ஆளுநர்பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் மீதும் - தமிழக மக்கள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தமிழக ஆளுநர் அவர்கள் பொதுவாழ்வில் போற்றத்தக்க பணியாற்றியவர். அரசியலிலும் - நிர்வாகத்திலும் பழுத்த அனுபவம் கொண்ட அவர், நான் சந்தித்த நேரங்களில் எல்லாம் என்னிடம் தனிப்பட்ட முறையில் அன்பு பாராட்டியவர்.அவரது பொதுவாழ்வு மென்மேலும் சிறக்க - ஆரோக்கியத்துடனும், நலமுடனும் பல்லாண்டு வாழ்ந்து - தமிழகத்திற்கும், நம் நாட்டிற்கும் ஆற்றல்மிகுந்த சேவையாற்றிட வேண்டும் என்று இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்.இவ்வாறு ஆளுநரை பாராட்டி ஸ்டாலின் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

 

Tags :

Share via