ஸ்பைடர் மேன் உடையில் வித்தை! தட்டி தூக்கிய போலீஸ்

by Staff / 26-04-2024 04:02:57pm
ஸ்பைடர் மேன் உடையில் வித்தை! தட்டி தூக்கிய போலீஸ்

தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் ஆதித்யா என்ற ஆணும், அவரின் தோழியான அஞ்சலியும் ஸ்பைடர் மேன் உடையணிந்து பைக்கில் விதவிதமான மற்றும் ஆபத்தான ஸ்ட்ண்ட்களை செய்தனர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக இவ்வாறு செய்த நிலையில் வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் சென்றது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது போன்ற போக்குவரத்து விதிகளை மீறியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo