டெல்லி முதல்வர் வீடு அருகே சூழ்ந்த வெள்ளம்

by Staff / 13-07-2023 12:28:04pm
டெல்லி முதல்வர் வீடு அருகே சூழ்ந்த வெள்ளம் யமுனை நதியில் வரலாறு காணாத வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அபாய அளவை தாண்டி பெருக்கெடுத்து ஓடும் யமுனை நதி டெல்லி மாநகருக்குள் பாய்ந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியும் யமுனை வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. டெல்லியின் பல பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு உள்ள பகுதியும் யமுனை வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. டெல்லி சட்டசபையை நோக்கியும் யமுனை நதி வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.<br /> &nbsp;
 

Tags :

Share via