2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்

by Staff / 29-05-2023 01:56:31pm
 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும்

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதே சமயம் 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் போன்ற இடங்களில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று கூறப்படுகிறது. அதனைப் போலவே பலரும் 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்து உள்ளன.இது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தமிழகத்தில் எங்கெல்லாம் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகும் என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து பாட்டில்களை வாங்கிக் கொள்ளலாம், மது கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பரவிய தகவல் போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே அரசு பேருந்துகள் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories