பொங்கல் வைத்து கொண்டாடிய பிரதமர் மோடி

by Staff / 14-01-2024 02:11:51pm
பொங்கல் வைத்து கொண்டாடிய பிரதமர் மோடி

டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி வேட்டி, சட்டை என தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, பொங்கலிட்டு வழிபாடு நடத்தினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.
 

 

Tags :

Share via

More stories