சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் அமெரிக்கா

by Admin / 16-03-2022 01:08:08pm
 சலுகை விலையில் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடும் அமெரிக்கா

இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர இருப்பதாக தகவல் வெளியாகின.

இதுகுறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும், கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் அதற்கான காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா விரைவில் கையெழுத்திட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யாவின் அறிவிப்பை ஏற்பதில் இந்தியா சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரலாற்று புத்தகங்களின் பக்கங்கள் எழுதப்பட உள்ள இந்த தருணத்தில் யார் பக்கம் நிற்க போகிறோம் என்பதை இந்தியா சிந்தித்து வுடிவெடுக்க வேண்டும் என்றும், ரஷ்யாவுக்கான ஆதரவு என்பது பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படையெடுப்புக்கான ஆதரவாகும் எனவும் தெரிவித்துள்ளது. 

சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் ரஷ்யாவின் அறிவிப்பை இந்தியா ஏற்க உள்ள இந்த தருணத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via