புதின் வைத்த ஒரே செக் அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவில் நுழைய தடை
உக்ரைன் மீது உக்கிர போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது பொருளாதார தடை உட்பட பல தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதில், 11 ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது .
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் எல்.
ஆஸ்டின், ராணுவ தளபதிகளின் தலைவர் மில்லே உட்பட பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷியாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும், வெறுப்புணர்வை தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்றும் ரஷிய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :