அஷ்டமி - நவமியில் ஏன் நல்ல விசயங்களை மேற்கொள்வதில்லை

by Admin / 16-08-2022 05:54:28pm
அஷ்டமி - நவமியில் ஏன் நல்ல விசயங்களை மேற்கொள்வதில்லை


இந்து மதம் , நம்பிக்கைகளின்  அடிப்படையில்  இயங்குவது. எந்தவொன்றிற்கும் காரண காரியங்களைத்தேடி அதன் படி தம் நெறிகளை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது. அஷ்டமியில் கிருஷ்ணர்  பிறந்ததால்  பாரத போர்  உருவாயிற்று என்றும் நவமியில் ராமன்  ஜனித்ததால் ,வனவாசம்  மேற்கொள்ளக்கூடிய  துயரம்  நிகழ்ந்ததும் சொல்லப்படுகிறது . முப்பது நாள்கள்நிலவு  பூமியை  சுற்றும்  பொழுது பாதி பொழுது  அமாவாசை காலமாகவும்  மீதிகாலம் பெளர்ணமி  வரையறுக்கப்படுகிறது .அமாவாசை-பெளர்ணமிக்கு  இடையில் எட்டாவது நாள் அஷ்டமியாகவும் அமாவாசை -பெளர்ணமி அடுத்த ஒன்பதாவது நாள் நவமி என்றழைக்கப்படுகிறது.இந்த நாள்களை திதி என்றும் அழைப்பர் அமாவாசை அடுத்தநாள் தொடங்கி.பெளர்ணமி வரை உள்ள நாள்கள் சுக்ல பட்சம் என்றும்  பெளர்ணமி அடுத்து  அமாவாசை வரையுள்ளநாள் கிருஷ்ண பட்சம் என்று அழைக்கபிபடுகிறது.தேய்பிறை  காலத்தில்  இரண்டு முறை நவமி  வரும். அஷ்டமியும் மாதத்தில் இரண்டுமுறை வளர்பறை அஷ்டமி,தேய்பிறை அஷ்டமி  என வரும் .பூமி சூரியன்- சந்திரனுக்கு நடுவில் வருவதால் ,சூரியசக்தியும் சந்திர சக்தியும்  ஒன்றை ஒன்று இழுப்பதால் ஒருவித காந்த அலை உருவாகி பூமியில் உள்ளஅனைத்து  உயிர்களையும்   ஈர்ப்பதால்,  அந்த  பொழுதுகள் தடுமாற்றத்திற்குரியதாக அமைகிறது.அதனால் நம்மால் ஒரு நிலைத்தன்மையான சிந்தனை போக்கை மேற்கொள்ள முடியாத  தடுமாற்றம் ஏற்படும். அஷ்டமி,நவமி இந்த இருநிலையிலும்  நம்  மனம்  அலைக்கழிவை  சந்திக்கும்  இந்த நிலை கழிந்தால்  நிலைத்தன்மை உருவாகும். அதனால்தா ன்அஷ்டமி-நவமியை  நம்  முன்னோர்கள் தவிர்த்தனர்.

 

Tags :

Share via