இன்று வைகுண்ட ஏகாதேசி. வைணவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள்
இன்று வைகுண்ட ஏகாதேசி. வைணவ தளங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் என்று பெருமாளுடன் இந்த வாசலை கடந்து தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கத்தில் இன்று பகல் பத்து திருவிழா நிறைவடைந்தது. நம்மாழ்வார்க்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுகள் விமர்சையாக நடைபெறும்.
நேற்றைய தினம் பக்தர்கள் முழு உபவாசம் இருந்து இரவில் விழித்திருந்து பெருமாளின் நாமங்களை ஜெபித்து பரமபததரிசனம் செய்த பின் விரதத்தை முடித்துக்கொள்வர்.. திருமலையிலும்பக்தர்கள் வைகுண்ட துவார தரிசத்தில் பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.
Tags :


















