. இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பட்டினிக்கு மருந்து ஆகாது ப.சிதம்பரம்

by Staff / 15-10-2022 12:55:45pm
. இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பட்டினிக்கு மருந்து ஆகாது ப.சிதம்பரம்

மொத்த இந்தியர்களில் 16.3% பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இருக்கும்போது, இந்துத்துவா, இந்தி திணிப்பு, வெறுப்பை பரப்புவது ஒதுபோதும் பசிக்கு மருந்து ஆகாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், இந்தியாவில் 22.4 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர். உலகளாவிய பட்டினி குறியீட்டில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. இதில் இந்தியாவின் இடம் 121 நாடுகளில் 107 ஆக உள்ளது. பிரதமர் மோடி எப்போது குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி மற்றும் வளர்ச்சி குன்றிய நிலை போன்ற உண்மையான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்.

2014-ல் மோடி அரசு ஆட்சி அமைத்ததில் இருந்தே இந்தியா, பட்டினிக் குறியீட்டில் கடைசி இடத்தில் உள்ளது. மொத்த இந்தியர்களில் 16.3% பேர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள். ஏனெனில் அவர்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை.19.3% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் உள்ளனர். இந்துத்துவா, இந்தியை திணிப்பது, வெறுப்பை பரப்புவது ஆகியவை பட்டினிக்கு மருந்து ஆகாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via