பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

by Staff / 26-10-2022 10:59:52am
 பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் ( 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்த வந்துள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்றுவிட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் போலீசாரால் அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருடு போன ஒரு காரைப் பிடிப்பதற்காக போலீசார் சாலைத்தடுப்பு ஏற்படுத்தி இருந்ததாகவும், அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது. அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo