மது போதையில்  மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது.

by Editor / 05-11-2024 01:02:42pm
மது போதையில்  மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது.

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகில் உள்ள  கருவந்தா கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த  சுரேஷ் (38) . இவரது மனைவி சிவனம்மாள் (35) இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் சுரேஷ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார்.

மது அருந்திவிட்டு   வீட்டுக்கு வந்த சுரேஷ், வழக்கம்போல வீட்டில் பீடி சுற்றிக் கொண்டிருந்த மனைவியிடம்  தகராறு செய்துள்ளார். பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், குடிபோதையில் இருந்த சுரேஷ், வீட்டில் கிடந்த அரிவாளால் நேற்று மாலையில் மனைவியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதில் ரத்த  வெள்ளத்தில் சிவனம்மாள் துடிதுடித்து இறந்தார்.

 இதனைத் தொடர்ந்து கையில் அரிவாளுடன் ரோட்டுக்கு வந்த சுரேஷ் ஊத்துமலை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸின் குறுக்கே படுத்துக்கொண்டு தன்மீது ஏற்றிவிட்டுச் செல்லுமாறு பிடிவாதம் செய்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி உள்ளனர். அவரது கையில் இருந்த அரிவாளில் ரத்தம் படிந்திருந்ததை கண்டவர்கள் விசாரித்த போது, தன் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்ததாக கூறிவிட்டு, ஓடி சென்று ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.  அங்கிருந்தும் அவரை மீட்டவர்கள், உடனடியாக இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வந்த போலீஸார் சிவனம்மாள் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுரேஷைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

மது போதையில்  மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது.
 

Tags : மது போதையில்  மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது.

Share via