சென்னை மெரினா கடற்கரையில் கலை நிகழ்ச்சி
சென்னை பெருநகர மாநகராட்சியின் சார்பில் மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மாலை ஐந்து முப்பது மணி அளவில் தொடங்கும் இந்நிகழ்ச்சிகளில் ,பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் பறையாட்டம், வில்லுப்பாட்டு, சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளும் காட்சிப்படுத்தப்பட்டு இளைஞர்கள் சிலம்பாட்ட திறமையையும் மற்ற கலைகளில் தாங்கள் ஈடுபாடுகளை வெளிப்படுத்திட...பரதநாட்டிய செவ்வியல் நடனங்களும் அரங்கேற்றப்படுகின்றது.. பொது மக்களின் பொழுதுபோக்கிற்காக, அதே நேரத்தில், தமிழர்களுடைய பாரம்பரிய கலையை தெரிந்து கொள்வதற்கும் அதன் மீது நாட்டம் ஏற்படுவதற்கும் வாரம் தோறும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
Tags :

















