வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு -இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
வாக்காளர் இறுதி பட்டியல் நாளை (ஜன.06) வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை பணிகள் கடந்தாண்டு டிச.24ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், நாளை மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட உள்ளனர்.
Tags : வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியீடு -இந்திய தேர்தல் ஆணையம் தகவல்