நடுரோட்டில் பெண் யூடியூபருக்கு பாலியல் தொல்லை

by Staff / 01-12-2022 12:45:26pm
நடுரோட்டில் பெண் யூடியூபருக்கு பாலியல் தொல்லை

மும்பையில் நடைபாதையில் பெண் யூடியூபர் ஒருவரை இரண்டு இளைஞர்கள் துன்புறுத்தியுள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் யூடியூபராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். செவ்வாய்கிழமை இரவு, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​இரு இளைஞர்கள் அவரை சில்மிஷம் செய்தனர்.அவரது கையை பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டனர். மேலும், அவருக்கு முத்திமிட முயன்றதால், பெண் பதறிப்போன இளம்பெண், பைக்கில் ஏற முடியாது என்று கூறி விலகிச் செல்கிறார். இளம்பெண் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது, ​​இளைஞர்கள் கையை பிடித்து இழுத்து பைக்கில் ஏற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், கையை தட்டிவிட்டு, அங்கிருந்து அப்பெண் தப்பிக்க முயன்ற காட்சி தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்தனர்.

 

Tags :

Share via