தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் 

by Editor / 20-03-2025 08:25:46pm
தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் 

மதுரை மாநகர திருப்பரங்குன்றம் மேம்பாலம் அருகே உள்ள இருப்பு பாதையில் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமல் அதிக கடன் பிரச்சினையால் 19.03.2025  அன்று மேம்பாலத்தில் இருந்து இருப்புப் பாதையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுரை நிலையூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் குட்டி கமல் வயது 27 என்பவரை கவனித்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்தும் சாமர்த்தியமாக  அவரிடம் பேச்சுக்கொடுத்து திசைதிருப்பி லாவகமாக மடக்கி பிடித்து தற்கொலை முயற்சியில் இருந்து மீட்டு காப்பாற்றினர். நற்செயலுக்காக திருப்பரங்குன்றம் போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய தலைமை காவலர் ஐயனார் செல்வம் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர்களை காவல் ஆணையர் நேரில் அழைத்து  நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.

 

Tags : தற்கொலை செய்ய முயன்ற இளைஞரின் உயிரை காப்பாற்றிய காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர் 

Share via