பரிசு விழுந்ததாக கூறி இருபத்தி ஆறு தவணைகளாக ரூபாய் 8.4 லட்சம் மோசடி செய்த தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம்

by Staff / 30-04-2022 04:56:52pm
பரிசு விழுந்ததாக கூறி இருபத்தி ஆறு தவணைகளாக ரூபாய் 8.4 லட்சம் மோசடி செய்த தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம்

சேலம் மாவட்டம் குப்பனூரில் கார் பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் சுமார் 8 லட்ச ரூபாய் மோசடி செய்த தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குப்பனுர்  பகுதியை சேர்ந்த ஜெயசித்ராவின் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தின் 13 ஆம் ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பரிசாக 16 லட்சம் மதிப்பிலான கார் பரிசு விழுந்துள்ளது என குறிப்பிட்டு ஒரு கடிதம் வந்ததாக கூறப்படும் நிலையில் அதனைப் பெறுவதற்கு சான்றிதழ் தயாரித்து 20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும் செல்போன் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த மோசடி தகவலை நம்பிய ஜெயசித்ரா 20 ஆயிரம் ரூபாயை அனுப்பிய நிலையில் அவரிடம் இருந்து இருபத்தி ஆறு தவணைகளாக 8 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் வரை தனியார் ஆன்லைன் நிறுவனங்கள் பணம் பறித்துள்ளது. ஆனால் அதன் பின்னரும் வழங்கப்படாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஜெயசித்ரா இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் எந்த ஒரு நிறுவனம் பெரும் மதிப்பில் பரிசு பொருட்களை வழங்குவது இல்லை என்றும் எனவே ஆதாரமற்ற தகவல்களை நமப வேண்டாம் எனவும் பொதுமக்களை சைபர் கிராம் போலீசார் கேட்டுகொண்டுஉள்ளனர் .

 

Tags :

Share via

More stories