தவெகவை ஒரு கட்சியாகவே எடுத்து கொள்ளவில்லை: அமைச்சர் ரகுபதி

தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும் போது, "தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். திருபுவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யார் ஆட்சியில் அதிக லாக்அப் மரணங்கள் நடந்தன என்ற பட்டியலை வெளியிட தயார். தவெகவை நாங்கள் ஒரு கட்சியாகவே எடுத்துக்கொள்ளவில்லை" என்றார்.
Tags :