வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை எகிப்து பயணம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை (அக்டோபர் 15) 2 நாள் பயணமாக எகிப்து செல்கிறார். இந்தப் பயணத்தின்போது இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்த இப்பயணம் உதவும்.
Tags :