மீனவர்கள் இன்று கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.

by Editor / 07-05-2023 08:13:42am
மீனவர்கள் இன்று கரைக்கு திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 8 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும்.மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தெற்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் இன்று கரைக்கு திரும்புமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.மேலும்விபரங்களுக்கு mausam.imd.gov.in/chennai  என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம்.

 

Tags :

Share via

More stories