தேசியக்கொடி ஏற்றும்போது பலியான முன்னாள் ராணுவ வீரர்

by Editor / 15-08-2022 02:50:31pm
தேசியக்கொடி ஏற்றும்போது  பலியான முன்னாள் ராணுவ வீரர்

சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் கடபா தாலுகா குற்றபாடி பஞ்சாயத்தில் உள்ள பழைய ஸ்டேஷன் அமிர்த சரோவர் அருகே நடந்த கொடியேற்றத்தின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

கொடியேற்றத்தை முன்னாள் தலைவர் என். கருணாகரா கொடி ஏற்றுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது, ​​அங்கு நின்றிருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கங்காதர கவுடா கொடி வணக்கத்தை தெரிவித்தார். கொடியேற்றத்திற்கு தயாராகி கொண்டிருந்த போது, ​​கங்காதர கவுடா, மயங்கி விழுந்தவுடன் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories

Logo