கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்க சென்ற இளைஞர் குத்தி கொலை.

by Editor / 09-04-2022 03:37:35pm
கள்ளச்சந்தையில் மதுபானம் வாங்க சென்ற இளைஞர் குத்தி கொலை.

மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில் கள்ளச்சந்தையில் மதுப்பானம் விற்பனை நடைபெற்றுவருவதாக கூறப்ப்டுகிறது.இதன் தொடர்ச்சியாக மதுபானம் வாங்கச் சென்ற கீழ நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை, அங்கு மது விற்பனை செய்து வந்த தமிழ்மணி  என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஜீவானந்தம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

 

Tags :

Share via

More stories