மத்திய கிழக்கு,தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு.

by Editor / 01-08-2023 06:54:49am
மத்திய கிழக்கு,தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 

Tags :

Share via
Logo