சூட்கேஸில் பெண்ணின் சடலம்
ஹரியானா மாநிலம் பானிபட்டில் ரயில்வே மேம்பாலம் அருகே சூட்கேஸில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ரோஹ்தக்-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெண்ணின் வாயையும், கால்களை பச்சை கயிற்றால் கட்டியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தகவல் அறிந்த ஹரியானா போலீசார் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். தேவையான அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாததால், சடலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இந்த கொடூர கொலையை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :















.png)


.jpg)
