கடையநல்லூர் நகராட்சி 17 வார்டுவேட்பாளர் பெயர் சரிசெய்யப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு

கடையநல்லூர் நகராட்சி 17 வார்டு புதூர் பள்ளிக்கூட தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வேட்பாளர் பெயர் வரிசை எண் 3வதில் சகிலா பானு என்பதற்குப் பதிலாக சசிகலா பானு என எழுதி உள்ளதால் இந்த வாக்குச் சாவடியில் தேர்தல் நடத்துவதை நிறுத்த சகிலாபானு தேர்தல் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தார் உடனே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு விரைந்து வந்த தேர்தல் நடத்தும் அலுவலரும் நகராட்சி ஆணையாளருமான ரவிச்சந்திரன் வேட்பாளரின் பெயரை சரி செய்ய உத்தரவிட்டார் அதனை தொடர்ந்து சசிகலா பானு என்பதை சகிலா பானு என திருத்தப்பட்டது எனவே 17 வது வார்டில் வழக்கம்போல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

Tags : கடையநல்லூர் நகராட்சி