வாலிபர் மர்ம மரணம் . போலீஸார் விசாரணை

by Staff / 27-06-2024 01:38:27pm
வாலிபர் மர்ம மரணம் . போலீஸார் விசாரணை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி மகன் வைரகணேஷ் (20) லோடுமேன் வேலை பார்த்து வந்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது மது அருந்தி விட்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று இரவு மதுஅருந்தி விட்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததால் அவர்களது நண்பர்கள் சிலர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு, விட்டு சென்றுள்ளனர்.இரவு தூங்க சென்ற வைர கணேசை அடுத்த நாள் காலையில் அவரது சித்தி ராதிகா எழுப்ப முயன்றுள்ளார். அப்போது வாலிபர் வைரகணேஷ் உடல் விரைத்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்தவர்கள் வைர கணேசை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தந்தை பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via