சிறுமியை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த ஊசிமலை எஸ்டேட் பகுதியில் நேற்று சிறுத்தை தாக்கி வெளிமாநில தோட்ட தொழிலாளியின் 4 வயது மகள் உயிரிழந்தார். அது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இதனை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்டறித்து கூண்டு வைத்து பிடிக்கும் படி வனத்துறை யினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். வால்பாறை வன சரகம் அதிகாரி சம்பவம் நடந்த இடத்திறகு வந்த வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வந்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கேமரா ட்ராப் வைத்து கண்டறிந்து அதன் பிறகே கூண்டு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மேலும் பொது மக்கள் கூறுகையில் எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் அடர்ந்த புற்கள் அதிகம் இருப்பதால் வனவிலகுகள் அங்கு தங்கி இது போன்ற மக்களை தாக்குகிறது, உடனே குடியிருக்கும் பகுதியில் உள்ள அடர்ந்த புற்களை அகற்ற எஸ்டேட் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
Tags : வால்பாறையில் சிறுமியை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொது மக்கள் கோரிக்கை













.jpg)





