கள்ளக்குறிச்சியில் இபிஎஸ் தலைமையில் போராட்டம்

by Staff / 24-06-2024 11:28:02am
கள்ளக்குறிச்சியில் இபிஎஸ் தலைமையில் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் அருந்தி 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராயம் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதவி விலகக் கோரியும் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சியில் இன்று (ஜூன் 24) போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கருப்பு சட்டை அணிந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். தமிழகத்தின் பிற மாவட்டங்களின் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories