நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் ரவிமரியா அஞ்சலி

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவுடன் பணியாற்றிய, சக திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு நடிகர் ரவிமரியா அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “40 வருடம் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட ஒரு மனிதருக்கு, அதே எதிர்நீச்சல் சீரியல் வழியாக மக்கள் மனதில் இடம் கிடைத்தது” என தெரிவித்துள்ளார்.
Tags :