கோடநாடு வழக்கு விசாரணைக்குத் தடை கேட்ட அதிமுக பிரமுகர் மனு தள்ளுபடி

by Editor / 07-09-2021 08:39:56pm
கோடநாடு வழக்கு விசாரணைக்குத் தடை கேட்ட அதிமுக பிரமுகர் மனு தள்ளுபடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவில், ஓம் பஹதூர் என்ற பாதுகாவலரைக் கொலை செய்த ஒரு கும்பல் முக்கிய ஆவணங்களைத் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே இதுதொடர்பாக தமிழ அரசு 6 தனிப்படைகள் அமைத்து இந்த கொலைத் தொடர்பாக மேல் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை கோரிய அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணைக்கு எந்த தடையும் இல்லை என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தனர். 

 

Tags :

Share via