சூரியன் வழிபட்ட கோயில்- திருவாமூர்

by Admin / 13-02-2023 09:54:19am
சூரியன் வழிபட்ட கோயில்- திருவாமூர்

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் என அழைக்கப்பெறும் சிவன் ஆதியும் அந்தமும் இல்லா முழு முதற்கடவுள்.தீமைகளை
அழித்து மக்களை காக்கும் பத்து அவதாரம் எடுத்த பெருமாள்.உலகை ,உலக அனைத்து சிருஷ்டிக்கும் காரணகர்த்தாவான பிரம்மா...இவர்களில் சிவனுக்கும் பெருமாளுக்கும் மட்டும்தான் இந்தியா முழுதும் கோயில்கள் கட்டிகொண்டாடி வருகின்றனர்.பிரம்மாவிற்கு வட இந்தியாவில் ஒரு சில கோயில்களும்  தமிழ்நாட்டில் ஒரே  கோயிலும் உள்ளன.
சிவன்  எழுந்தருளிஇருக்கும்  ஆலயத்தை மூர்த்தி,தலம்,தீர்த்தம் என அழைப்பர்.அத்தகுச்சிறப்பு வாய்ந்த கோயில்களுள்
ஒன்று.சூரியன் வழிபட்ட தலம், திருவாமூர்.சூரியன் வழிபட்ட தலம்.அதன் பொருட்டே ..இங்குள்ள தீர்த்தத்தை சூரிய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.மூன்று நிலை ராச கோபுரத்துடன் கிழக்குப்பார்த்த குளத்து விநாயகர் கோவிலாகத்திகழும் இக்கோயில் அரிச்சந்திர நதிக்கரையில் உள்ளது.இக்கோயிலினுள் எழுந்தருளி  இருக்கு ம் தெய்வம் வாய்மூர் நாதர்.  நன்மொழி  யம்மை. அப்பர்,சம்பந்தர்,திருநாவுக்கரசர் மூவராலும் பாடல் பெற்ற தலம்.தேவர்கள் தாரகாசுரனுக்கு பயந்து பறவை வடிவெடுத்து
இத்தீர்த்ததில் நீராடி பெருமாளை வழிபட்டு பாவம் நீங்கினர்.

சூரியன் வழிபட்ட கோயில்- திருவாமூர்
 

Tags :

Share via