பெண் கழுத்தை அறுத்து படுகொலை

by Staff / 13-02-2023 11:05:43am
பெண் கழுத்தை அறுத்து படுகொலை

திரிணாமுல் காங்கிரஸ் பெண் நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கேனிங் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுசித்ரா மண்டல் (48), திரிணாமுல் காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அங்குள்ள உருளைக்கிழங்கு தோட்டத்தில் சுசித்ராவின் உடல் ரத்த வெள்ளத்தில் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அவரது அந்தரங்க உறுப்புகள் தெரியும்படி சடலம் வீசப்பட்டுள்ளது. கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் இருந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo