வெள்ள நீரில் மிதந்து வந்த சடலம்
திருநெல்வேலியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் சடலம் ஒன்று மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி உள்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலையம் சந்திப்பு அருகே வெள்ள நீரில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் ஒன்று மிதந்து வந்தது. சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :















.jpg)
.jpg)
.jpg)
.jpg)
