சிவ வழிபாட்டில் பிரதோஷம்

by Admin / 24-07-2021 11:11:49pm
சிவ வழிபாட்டில் பிரதோஷம்

சிவ வழிபாட்டில் முக்கிய விரதநாளாகக் கொண்டாடப்படுவது பிரதோஷமாகும். பிரதோஷம், மாதம்தோறும் சுக்லபட்சம்,கிருஷ்ணபட்சம் ஆகிய இரண்டு காலத்திலும் வரும். பிரதோஷம், சனிக்கிழமை அன்று வந்தால் மிகச்சிறப்பானதாகக் கருதப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை நாளில் பிரதோஷம் வந்தால், அன்று விரதம் தொடங்குவது நல்லது. சிவ புண்ணிய தலங்களில்,

சிவனுக்கும் நந்திக்கும் ஒரே நேரத்தில் அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்பெறுவதால் இது சிறப்பிற்குரியதாகிறது. பிரதோஷம் அன்று சிவபெருமானை இடபவாகனத்தில் எழுந்தருளச் செய்வர்அப்பொழுதில சிவனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்இப்பிரதோஷ வழிபாடு குறித்து அறிந்து கொள்ள நாம் புராணக்கதை வழி பயணிப்போம்.

           சிவன் மீது அளவற்ற பக்தி கொண்டவர் துருவாச முனிவர். அவர் ஒரு நாள் சிவனை வழிபட்டுவந்து  கொண்டிருக்கையில் எதிரே, தேவலோக அதிபதி இந்திரன் தம் ஐராவதம் எனும் யானை மீதேறி வந்து கொண்டிருந்தான்…. இந்திரனைப் பார்த்த துருவாசர் தாம் சிவபெருமானை வழிபட்டு கொண்டு வரும் பூவை, இந்திரனிடம் மரியாதை நிமித்தமாக அளிக்கஅதை இந்திரன் கையினால் வாங்காமல் தம் யானையைக் கட்டுப்படுத்த வைத்திருக்கும் அங்குசத்தால் வாங்கியானையின் மத்தகத்தின் மீது பூவை வைத்தான்ஐராவத வெள்ளை யானையோ பூவை எடுத்துத் தம் காலின் கீழே போட்டு மிதித்தது

இதைப் பார்த்த துருவாசரோ, கடுங்கோபம் கொண்டார்சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்த புனித மலரை இப்படிச் செய்வதா? இந்திரனேஇது உம்மமதை, செருக்கு அல்லவா? என்று கூறி, உன்னிடமுள்ள, கேட்டதெல்லாம் கொடுக்கக்கூடிய காமதேனுபசு, கற்பகத்தரு (மரம்) சிந்தாமணி முதலிய அனைத்து செல்வங்களும் இன்றிலிருந்து உன்னை விட்டு நீங்கி திருப்பாற்கடலைச் சேரட்டும் என்று சாபமிட்டார்பின் என்ன? இந்திரனும் இந்திரலோகத் தேவர்களும் தேஜஸ் இழந்தனர். ஆற்றல் குன்றினர்பலமிழந்த இந்திரனையும் தேவர்களையும் அசுரக்குலத்தினர் வம்பு சண்டை இழுத்தனர். போர் நடந்ததுஅசுரரை எதிர்த்து நின்று போர்புரிய முடியாமல் பிரம்மாவை நாடினர்பிரம்மா, இந்திரனையும் தேவர்களையும் திருமாலிடம் அழைத்துச் சென்றார்.. தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்குங்கள் என்று வேண்டினர்.

திருமால், “பாற்கடலைக் கடைந்து அதில் வரும் அமுதை உண்டால், அசுரர்களை வெல்ல முடியும் என்று அருளினார். தேவர்கள் மந்தரமலையை மத்தாகவாசுகி பாம்பை கயிறாக கொண்டு திருப்பாற் கடலைக் கடைந்தனர். எந்தவொருச் செயலுக்கு முன்னாலும் சிவனை நினைத்துத் தொடங்கினால், அது தோல்வியே ஏற்படாது என்பதனை மறந்த தேர்கள், திருப்பாற்கடலை கடைந்து உருவான அமிழ்தில் வாசுகியின் விடம் கலந்துவிட்டது என்பதை அறிந்து பதறினர்நாரதர்தேவர்களுடன் சென்று சிவனைத் தரிசித்து தம் தவறை மன்னித்து, அமுதை உண்ண வழி தாருங்கள் என்று கெஞ்சி கேட்க, சிவனோ மனமிறங்கி, நஞ்சு கலந்த அமுதை தாமே உண்டு தேவர்களின் அச்சத்தைப் போக்கி துயருற்ற அவர்களைக் காத்தார்சிவன் நஞ்சுண்ட நாளில் தேவர்கள் உணவு உண்ணாது விரதமிருந்தனர்.

அந்நாளே ஏகாதேசியாயிற்று மறுதினம் தேவர் தம் இறைவழிபாட்டை முடித்து உணவு உண்டனர். அந்நாள் துவாதசியாக அழைக்கப்பட்டதுஇதற்கடுத்த நாள் மாலைக்கு முந்திய பொழுதில் மூன்றே முக்கால் நாழிகைக்கு திரயோதசியோடு கூடிய நாளில், துன்பம் அடைந்தவர்கள் இன்பம் பெற ஏழரை நாழிகை சிவபெருமான் நந்தியின் மீது அமர்ந்து திருகாட்சி தந்தார். அந்தக்காலமே பிரதோஷகாலம் என வேத ஆகமங்கள் சொல்கின்றனஇந்த தேவநாளில் நாம் சிவனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும்.

 

சிவ வழிபாட்டில் பிரதோஷம்
 

Tags :

Share via