பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியீடு
தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.
Tags :



















