வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வேலியில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருள்.

by Admin / 20-01-2022 03:07:08pm
வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வேலியில் கட்டி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருள்.

குன்னூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் அதிக அளவில் வன பகுதிகளும், தேயிலை தோட்டங்களும் உள்ளன.

இங்கு கரடி, சிறுத்தை, காட்டாடு, காட்டெருமை, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் வன பகுதிகளிலிருந்து ஊருக்குள் உணவை தேடி வருவது வழக்கம். 

அவ்வாறு வரும் காட்டு பன்றி, காட்டாடு போன்றவற்றை பிடிக்க சில சமூக விரோதிகள் அவுட்டுக்காய் என்ற வெடி பொருளை இந்த விலங்குகள் சாப்பிடக்கூடிய உணவுக்கு அடியில் வைத்து விடுவார்கள்.

இதனை வன விலங்குகள் சாப்பிட்ட உடன் வாய் மற்றும் தலை வெடித்து சிதறும். பின்னர் இதன் உடல்களை எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவார்கள்.

இந்நிலையில் குன்னூர் கரோலினா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யாரோ மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிக்க அவுட்டுக்காய் வெடியை வைத்துள்ளதாக குன்னூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவுட்டுக்காய் வெடியை கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.

 

Tags :

Share via