பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்

by Writer / 23-05-2022 02:38:15am
 பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதாரச்சிக்கல் காரணமாக மக்கள் கடும்பாதிப்பிற்கு உள்ளாயினர்.இனப்போருக்குப்பின் ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் ஒருங்க திரண்டு கோத்தபய ராட்சபட்சேயை அதிகாரத்தை விட்டு இறக்கினர்.இந்நிலையில் தமிழ் தொப்புழ் கொடி உறவுகளோடு அனைத்து மக்களின் உணவு,குழந்தைகளுக்கு பால் பவுடர் கிடைக்காமல் சிரமப்பட்டனர்.இதனைக்கருத்தில் கொண்டதமிழக அரசு அமைச்சர்,எம்.எல்.ஏ.,எதிர்க்கட்சியினர் தொழிலதிபர்கள் தந்த நிதி உதவியோடு தமிழக அரசின்பங்களிப்பு என 8.84 கோடி மதிப்புடைய அரிசி,பால் பொடி,அத்தியவாசிய மருந்து உள்ளிட்ட பொருள்களைகப்பல் மூலம் தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்தார். அப்பொருள்கள் இலங்கைக்கு சென்றன .அவற்றைஇந்திய தூதர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வழங்கினார்.தம் நாட்டு மக்களுக்கு நிவாரணப்பொருள்களை வழங்கியமைக்கு அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தம் ட்விட்டர் பக்கத்தில்,

'இலங்கைக்கு இன்று. இந்தியாவில் இருந்து பால் பவுடர், அரிசி மற்றும் மருந்துகள் உட்பட 2 பில்லியன் மதிப்புள்ள மனிதாபிமான உதவிகள் வழங்கிய. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டானினுக்கும் அவர்களுக்கு  இந்திய மக்கள் ஆதரவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்'

 

.

 
 பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே  தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
 

Tags :

Share via