மீண்டும் இ பாஸ், தேநீர் கடைக்கு தடை   கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழக அரசு அதிரடி 

by Editor / 14-05-2021 08:10:19pm
மீண்டும் இ பாஸ், தேநீர் கடைக்கு தடை   கூடுதல் கட்டுப்பாடுகள் தமிழக அரசு அதிரடி 

 


தமிழகத்தில் நாளை   முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்டுகின்றன .மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் எனவும், தேநீர் கடைகளை இயங்க தடை விதித்தும் அரசு 
உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமடைந்து  வருகிறது. ஏற்கனவே முழு ஊரடங்கு அமல்படுத்தியிருக்கும் நிலையில்  தடுப்பூசி போடும் பணிகள்  விரிவுபடுத்தப்பட்டு வருகிறது .
இந்த நிலையில், தமிழகத்தில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நண்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
மே 17 ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தேநீர் கடைகள் இயங்க அனுமதி இல்லை  ஊரடங்கு விதிகளை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏ டி எம் , பெட்ரோல் பங்குகள், மெடிக்கல், நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல திறக்க அனுமதிக்கப்படுகிறது.
காய்கறி, பூ, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்  செயல்பட அனுமதி இல்லை.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு. டீ கடைகள் இயங்க அனுமதி இல்லை.மே. 17 ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் கட்டாயம்.ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடரும்
(E-Commerce) மின் வர்த்தக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை போன்றவற்றை வீட்டின் அருகில் உள்ள கடைகளில் வாங்கவும்; அதிக தூரம் பயணிக்க முற்படுபவர்கள் தடுக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 

 

Tags :

Share via