“மேயர் எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்?"எடப்பாடி பழனிசாமி கேள்வி

by Staff / 21-07-2024 03:52:23pm
“மேயர் எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்?

தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “குறைந்த விலையில் சுகாதாரமான உணவு கிடைக்க அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா உணவகம் சரியாக செயல்படவில்லை. சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மேயர் பிரியா இதுவரை எத்தனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்துள்ளார்?. கடந்த 3 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் ஆய்வு செய்யவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via