ஒப்பந்த ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து நேற்று புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்து துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ.16,000-இல் இருந்து ரூ.24,000 ஆக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. PRTC பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுடன் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags :