புதிய அத்தியாயங்களுக்கு வலுவூட்டுவதே மே தினம்.

by Admin / 01-05-2024 12:16:05am
புதிய அத்தியாயங்களுக்கு வலுவூட்டுவதே மே தினம்.

உழைப்பால் விளைந்த உலகு..

உடல் உழைப்பும் மூளை உழைப்பும் ஒருங்கு சேர்ந்து உருவாக்கிய உலகில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

ஆதி மனிதனின் உழைப்பின் தொடக்கம்... இன்றைய மனித சங்கிலியின் தொடர் கண்ணிகளாகும்.

மனிதரிடம் மட்டும்தான், தான் வாழுகின்ற பூமியை வளப்படுத்துவதற்கும் ...வசப்படுத்துவதற்கும் ஆனா அறிவு இருக்கின்றது. .அந்த அறிவு தான்... உலகை தன் உழைப்பால் புதிதாக உருவாக்குவதற்கு அடித்தளம் விட்டது.. இன்றைக்கு, இந்த மனித குலம் அனுபவித்து வருகின்ற அத்தனைக்கும் அடிப்படை உழைப்பு... உழைப்பு... உழைப்பு. மனிதர்களின் உழைப்புக்கு ஈடு எதுவும் இல்லை..

அவன் வியர்வைத் துளியில் தான் சூரியனும் முகம் பார்க்கின்றான்

. உழைப்பவன் இன்றி இந்த உலகம் இல்லை. அவன் பிரபஞ்சத்தின் வடிவமைப்புகளை தனக்கு சாதகமாக ....புதிய ஒன்றாக மாற்றி வடிவமைத்து கொண்டு வாழ்ந்து வருகின்றான் .அதற்கு காரணம், உழைப்பு... உழைப்பு... உழைப்பு

. மனிதன் மட்டும்தான், தன் உழைப்பின் வழியாக பல உன்னதங்களை... பல மேன்மைகளை அடைந்து கொண்டிருக்கின்றான்.. எத்தனையோ ஜீவராசிகள், இந்த பூமியில்... இந்த பிரபஞ்சத்தில் வாழ்ந்தாலும் மனிதனுடைய உழைப்பு மட்டும்தான் புதிய மாற்றத்தை... புதிய முகவரியை... இந்த பூமிக்கு தந்தது.. அதனால், உழைக்கும்  வர்க்கத்தின்  எச்சத் தொடர்  நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றது .அந்த புதிய அத்தியாயங்களுக்கு வலுவூட்டுவதே மே தினம்.

 

 

Tags :

Share via