மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி

by Staff / 28-11-2023 01:26:01pm
மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் - அன்புமணி

திடீர் மின் தடையால் வெண்டிலேட்டர் செயலிழந்து நோயாளி உயிரிழந்த சம்பவம் வேதனை - பேரவலம் - இனியும் நடக்காமல் தடுக்க மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மின்தடையால், வெண்டிலேட்டர்கள் செயலிழந்ததில், அமராவதி என்ற பெண் நோயி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மருத்துவமனையில் நடந்த குளறுபடிகள், நோயாளியின் உயிரிழப்பு, அதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo