டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25 வரை அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை.

சென்னையிலுள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகமும், தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று (மார்ச். 20) சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது டாஸ்மாக் முறைகேடு புகாரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25 வரை அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Tags : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக மார்ச் 25 வரை அமலாக்கத்துறை விசாரிக்க உயர் நீதிமன்றம் தடை.